புதன், 30 ஜனவரி, 2013

இன்று ஜனவரி 30- தியாகிகள் நாள்.



                                                          இன்று   தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30 ம் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
                                                             நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

                                                     இது நாட்டுக்கு நாடு வேறுபடும். அவ்வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுட்டுக்கொல்லப்பட்ட ஜன., 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு, பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. தொடக்கம் முதல் கடைசி வரை "அகிம்சை' கொள்கையில் இருந்து, அவர் விலகவே இல்லை. இவரது அகிம்சை கொள்கை, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி , அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறையை பின்பற்ற உறுதி ஏற்போம். 
                                            ஜெய்ஹிந்த்............!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக