திங்கள், 5 செப்டம்பர், 2016

மனத்தைக் கவர்ந்த அன்னை தெரசாவின் வரிகள்:



1)   இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம். 

2)   அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது. 

3)   குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது. 

4)   வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள். 

5)   வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை. 

6)   அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல். 

7)   மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.

8)   தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.

9)   உனக்கு உதவியோரை மறக்காதே.

 10) உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.

 11) உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.

 12) சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.

13) ஆனந்தம் ஆற்றல் மிக்கது.

14) புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார். 

15) நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே. 

16) உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும். 

17) பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல. 

18) செபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை. 

19) தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது. 

20) தனிமையே நவீனத் தொழுநோய். 

21) அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம். 

22) உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை. 

23) எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.

24) குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.

25) ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. 

26) புன்னகையே அன்பின் ஆரம்பம். 

27) உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.

28) நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.

29) உதவி செய்; அஃது உன்னை வருத்தும்வரை உதவி செய். 

30) வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல. 

31) வெற்றிக்காகச் செபிக்காதே; பற்றுறுதிக்காகச் செபி. 

32) உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது. 

33) புன்னகையே அமைதியின் ஆரம்பம். 

34) உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

வெற்றியாளர் ஆவதற்கான செயல்திட்டப் படிநிலைகள்:


1. எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.

2. இப்பொழுதே எதையும் செய்து விடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்.

3. நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

4. உண்மையான கல்வியைப் பெறுங்கள்.


5. உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுயமதிப்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. தீயப் பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்.

7. அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.

8. நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்.

                                                                                                                            - இசக்கிதாஸ்.

சனி, 3 செப்டம்பர், 2016

நம்பிக்கை தரும் வரிகள் !!!


 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!

 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!

 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!

 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!

 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!

கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..

முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!

வெற்றிப்பாதை!!

 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!

 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!

 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!

 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!

 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!

 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!

 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!

 பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!

 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!

 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!

 தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!

 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!